மதுரை முனிச்சாலையை பீதிக்குள்ளாக்கிய "டியூப்லைட்"!
மதுரை: மதுரையில் ஒரு குப்பைத் தொட்டியில் வெடித்துச் சிதறிய டியூப் லைட்டால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது.
முனிச்சாலை பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் நேற்று திடீரென பலத்த சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வெடித்தது வெடிகுண்டு என்றும் தகவல் பரவியது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். பொதுமக்கள் அந்தக் குப்பைத் தொட்டிப் பகுதியிலிருந்து அலறியடித்து ஓடினர்.

மோப்ப நாய்களை வரவழைத்த போலீஸார் குப்பைத் தொட்டியை கிளறிப் பார்த்து ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். இந்த சோதனையில், வெடித்தது சாதாரண டியூப்லைட்தான் என்றும், வெடிகுண்டு இல்லை என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் முனிச்சாலை மட்டுமல்லாமல் மதுரையிலும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் குப்பைத் தொட்டியில் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில் வரிச்சியூர் செல்வம் பெருசு அழகர் என்ற இரு ரவுடிக் கும்பல்களுக்கிடையே இருந்து வந்த மோதல் காரணமாக பயன்படுத்த இவை தயாரித்துக் கொண்டு வரப்பட்டவை என்று தெரிய வந்தது.
மேலும் அடிக்கடி மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கி வந்த நிலையில் நேற்று குப்பைத் தொட்டியில் டியூப் லைட் வெடித்ததால் மக்கள் பெரும் பீதியடைந்து விட்டனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications