தூத்துக்குடி கூட்டம் தேமுதிகவுக்கு வலு சேர்க்கும்... கொ.ப.செ. சந்திரகுமார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கூடும் தொண்டர்களின் கூட்டம் தேமுதிகவின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்று தேமுதிகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் 9வது ஆண்டு துவக்கவிழா தூத்துக்குடி புதுக்கிராமத்தில் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை வகித்தார்.
விழாவில், தேமுதிகவின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கட்சியின் 9வது ஆண்டு துவக்கவிழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ அரசியல் இயக்கங்கள் இருந்தாலும் தனிமனிதனால் உருவாக்கப்பட்ட தேமுதிக இயக்கம் இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டு மாபெரும் சக்தியாக உருவாகியுள்ளது மிகப்பெரும் சாதனையாகும்.
9ம் ஆண்டு துவக்கவிழாவை தென்தமிழகத்தில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்த தேமுதிக தலைவர் கேப்டன் தூத்துக்குடியை தேர்வு செய்துள்ளார். தலைவரின் விருப்பப்படி தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி தேமுதிகவின் 9ம் ஆண்டு துவக்கவிழாவிற்கான மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

தூத்துக்குடியில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் தேமுதிகவின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையும். தென்தமிழகமான தூத்துக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் கூட்டம் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தென்தமிழகத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தையும் முன்னிறுத்தி நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications