திமுக கவுன்சிலர் வார்டுக்கு "ஃப்ரீ" பொருட்கள் கிடையாது- அதிமுக எதிர்ப்பு: மக்கள் சாலைமறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வெற்றி பெற்ற வார்டுக்கு விலையில்லா, மிக்சி, கிரைண்டர் விநியோகம் செய்யக்கூடாது என அதிமுகவினர் தடுத்ததல் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 2வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசின் இலவச பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதன் பொருட்டு இந்திரா நகரில் உள்ள ரேசன் கடையில் பயனாளிகளுக்கு டோக்கன்களை வருவாய் துறை அலுவலர்கள் வினியோகம் செய்தனர். இதை பெறுவதற்காக பொதுமக்கள் அங்கு அதிக அளவில் குவிந்தனர்.
2வது வார்டு கவுன்சிலர் கீதா முருகேசன் திமுகவை சேர்ந்தவர். என்பதால், அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் வினோத், சந்தனம் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அதிகாரிகளிடம்,
பொருட்களை வினியோக்க கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைத்தனர்.
இந்நிலையில் அதிகாரிகள் டோக்கன் வினியோகிப்பதை நிறுத்தி விட்டு ரேசன் கடையை பூட்டி சென்றனர். இதனால் ஏமாற்றத்தால் கொதிப்படைந்த பொதுமக்கள் 2வது வார்டு கவுன்சிலர் கீதா முருகேசன் தலைமையில் திரண்டனர். 4ஆம் ரயில்வே கேட் சாலையில் திடீரென சாலை மறியலில் இறங்கினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த டவுன் டிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். கீதா முருகேசன் உள்ளிட்ட சிலரை மட்டும் ரேசன் கடைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அப்போதும் அதிமுகவினர் குறுக்கிட்டு போலீசாரிடம் விவாதித்தனர்.
மேலும் திமுக கவுன்சிலரிடம் வாக்கு வாதமும் செய்தனர். இதையடுத்து போலீசார் வாக்குவாதம் செய்த அதிமுகவினரை எச்சரித்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications