For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஒருத்தனாவது சாகனும்.." கொக்கரித்தபடி, தூத்துக்குடி மக்களை சுட்டு கொன்ற போலீஸ்.. அதிர்ச்சி வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்ட போலீஸ்- வீடியோ

    தூத்துக்குடி: "ஒருத்தனாவது சாகனும்" என்று கூறியபடியே, போலீசார் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக போராடியவர்களை சுட்டு வீழ்த்திய காட்சி வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை நச்சு வெளியிடுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது, கலவரக்காரர்களை தடுக்க துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஆனால், திட்டமிட்டே குறி பார்த்து நெஞ்சிலும், முகத்திலும் பொதுமக்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

    ஷார்ப் ஷூட்டர்ஸ்

    ஷார்ப் ஷூட்டர்ஸ்

    ஸ்னிப்பர் எனப்படும் தூரத்தில் இருந்து குறிபார்த்து சுடும் திறமையுள்ள போலீசாரை அழைத்து வந்து மக்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    வைரலாகி வரும் வீடியோ

    இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அப்படி ஒரு காட்சியில், துப்பாக்கியால் வேனின் மீது ஏறி ஒரு போலீஸ்காரர் குறி வைப்பதையும், அப்போது கீழேயிருந்து ஒரு போலீஸ்காரர் "ஒருத்தனாவது சாகனும்" என்று கூறுகிறார். அந்த ஆடியோவும் பதிவாகியுள்ளது.

    சாகனும்!

    சாகனும்!

    இதையடுத்து அந்த போலீஸ்காரர் சுடுகிறார். ஆனால் மறுமுனையில், யாராவது குண்டடிபட்டு விழுந்தார்களா என்ற காட்சி அதில் இல்லை.

    குருவி சுடுவது போல சுட்டுள்ளனர்

    குருவி சுடுவது போல சுட்டுள்ளனர்

    ஆனால், இதன் மூலம், திட்டமிட்டே போராட்டக்காரர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டு, மக்கள் குருவி சுடுவதை போல சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

    English summary
    A voice is heard in the background making a shocking statement, "At least one should die". A few seconds later, the policeman fires his first shot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X