ரூ247 கோடியில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் புனரமைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ரூ247 கோடியில்முழுமையாக புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைமை பொறியாளர் வள்ளியப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள முதல் 3 யூனி்ட்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலாகவும் அடுத்த 2 யூனிட்கள் 21 ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கி வருகின்றன. இவை ஆயுட்காலத்தை கடந்து தொடர்ந்து மின் உற்பத்தி பூர்த்தி செய்திருக்கின்றன. இந்த 3 யூனிட்களில் பல முறையும், அடுத்த 2 யூனிட்களில் 9 முறையும் 100 நாட்கள் தாண்டி தொடர்ச்சியாக மி்ன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
4வது யூனிட் மட்டும் கடந்த ஜனவரி 24ந் தேதி முதல் அக்டோபர் 21ந் தேதி வரை தொடர்ச்சியாக 268 நாட்கள் இயங்கி சாதனை படைத்துள்ளது. நீண்ட காலமாக இயங்கி வருவதால் முதல் 3 யூனிட்களில் உள்ள பாய்லரில் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் மின் உற்பத்தியை சீராக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை புதுப்பிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் மின் உற்பத்தி பாதிக்காதவாறு ஒவ்வொரு யூனிட்டையும் நிறுத்தி செய்ய வேண்டும். இதற்கு 1 முதல் ஓன்றரை ஆண்டுகள் வரை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டியது வரும். இதனால் 1 மாதத்திற்குள் முழுமையான பராமரிப்பு பணியின் போது அனைத்து முக்கிய பணிகளும் செய்து முடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பழுதுகளை கண்டறித்து புதுப்பிக்க ரூ.247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் 3வது யூனிட்டில் மட்டும் 6 முறை பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க ரூ.6 கோடியை மின் வாரியம் ஒதுக்கியுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு வரும் டிசம்பர் மாதம் இதற்கான பணிகள் தொடங்கும்.
இந்த பணிக்காலத்தில் 30 நாட்கள் 3வது யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்படும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications