தூத்துக்குடி: பேத்தியின் தோழியை சீரழித்த 80 வயது காமுகன் கைது!

தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் வேல். இவருக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 80 வயதான வேலின் பேத்தியின் வகுப்புத் தோழி, சுஜாதா (வயது 8, பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதியவர் வீட்டிற்கு விளையாட அடிக்கடி வருவாளாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் தோழியுடன் விளையாட வேலின் வீட்டிற்கு மாணவி சரிதா வந்துள்ளார்.
சிறுமியிடம் சில்மிஷம்
அப்போது, வீட்டில் தனியாக இருந்த வேல், சிறுமியை அழைத்து சென்று தனது மடியில் உட்கார வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆடைகளை களைய முற்பட்டதும் பயந்துபோன சரிதா, அழுது கத்தியிருக்கிறாள். சரிதாவின் வாயைப் பொத்தியபடி மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்ட வேல், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதேபோல், தொடர்ந்து மாணவி சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளி வகுப்பு ஆசிரியையிடம், ‘‘தனக்கு மயக்கம் வருவதாகவும், பிறப்புறுப்பில் வலி இருப்பதாகவும்‘‘ சிறுமி சரிதா கூறி இருக்கிறாள். பள்ளியில் இருந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், சரிதாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி சரிதா, தன் வகுப்பு தோழியின் தாத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதை கூறி இருக்கிறாள்.
இதையடுத்து, சரிதாவின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்கள். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிகரிக்கும் சம்பவம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சாக்லேட், பிஸ்கட் கொடுத்தும், பத்து, இருபது ரூபாய் கொடுத்தும் பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் ரோடு பகுதியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இப்படி தூத்துக்குடியில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதால் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications