இந்தப் பக்கம் பிந்தியா ராணி.. அந்தப் பக்கம் செல்வராணி.. நடுவே பூமி- 2 ராணிகளும் ஒரே வீட்டில்!

டி.வி. நடிகை பிந்தியா ராணியின் பிடியில் இருக்கும் எனது கணவர் பூமிநாதனை மீட்டு தாருங்கள் என அந்தமானைச் சேர்ந்த செல்வராணி போலீசில் புகார் அளித்தார்.
அதேசமயம், பூமிநாதன் எனது கணவர். அவரை விட்டுத்தர முடியாது என டி.வி. நடிகை பிந்தியா ராணியும் பேட்டியளித்தார். எதிரும் புதிருமாக இருந்தபடி, ஒருவர் மீது ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்து வந்த இவர்கள் இருவரும், ஒரே நாள் இரவில் அதிரடியாக மனம் மாறி இருக்கிறார்கள்.
மானாமதுரை செல்வராணி
சிவகங்கை அருகே உள்ள மானாமதுரையை சேர்ந்த செல்வராணி அந்தமானில் வசித்து வருகிறார். இவர் கடந்த 25-ந்தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து டி.வி. நடிகை பிந்தியா ராணி என்பவர் மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், எனது கணவரான ஆட்டோ டிரைவர் பூமிநாதனை, பிந்தியா ராணி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு தாருங்கள் என்றும் கூறியிருந்தார்.பூமி நாதனுடன் ஒன்றாக இருப்பது போன்ற திருமண போட்டோக்களையும் செல்வராணி வெளியிட்டார்.
டிவி நடிகை பதில்
இந்த புகாருக்கு டிவி நடிகை பிந்தியா ராணி செல்போன் மூலம் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 13 ஆண்டுகளாக பூமிநாதனுடன் குடும்பம் நடத்தி வருவதாக அவர் கூறினார்.
தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் பிரிந்து சென்றுவிட்டார் என்றும், ஒரு மகனும், மகளும் இருப்பது தெரிந்தே, பூமிநாதன் என்னை திருமணம் செய்து கொண்டார் என்று கூறி பெரிய குண்டை தூக்கி போட்டார்.
வலுக்கட்டாய திருமணம்
அதே நேரத்தில் செல்வராணி ஏற்கனவே திருமணமானவர் என்றும், உறவுக்கார பெண்ணான அவரை பார்க்கச் சென்ற இடத்தில், எனது கணவரை பிடித்து அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டினார். எனது கணவர் பூமிநாதனை செல்வராணிதான் அபகரிக்க நினைக்கிறார். பூமிநாதன் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்றும் நடிகை கூறினார்.
கொதித்த செல்வராணி
பிந்தியா ராணியின் இந்த பேட்டியால் ஆவேசமடைந்த செல்வராணி, புதன்கிழமை மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் ஒன்றை கொடுத்தார். கர்ப்பிணியாக இருக்கும் நான் பிந்தியா ராணியையும், பூமிநாதனையும் விடமாட்டேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று உரக்க குரல் கொடுத்தார். போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
போலீஸ் கமிஷனர் சமாதானம்
இதன் பின்னர் வியாழக்கிழமையன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து பூமிநாதன், பிந்தியாராணி, செல்வராணி ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும், விடாப்பிடியாக இருந்த பிந்தியா ராணி, செல்வராணியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பூமிநாதன்தான் தந்தை என்று அவர் கூறுகிறார். எனவே பூமிநாதன் மீது வழக்கு போடுங்கள். நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதையடுத்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற 3 பேரிடமும் அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
ஒரே வீட்டில் குடித்தனம்
மனம் மாறிய செல்வராணியும் பிந்தியாராணியும், பூமிநாதன், பூமிநாதனுடன் சேர்ந்து வாழ்வோம் என்று கூறினர். செல்வராணி கூறும்போது, பிந்தியா ராணியுடன் இனி, நான் இணக்கமாக செல்வேன். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
பிந்தியா ராணி கூறும்போது, எனது கணவருக்கு 2-வது மனைவியாக வாழ செல்வராணி சம்மதித்துள்ளார். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வோம் என்றார். இதையடுத்து ஒரே கணவருக்கு இரண்டு பெண்களிடையே ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது.
சீரியல் போல வாழ்க்கை
இன்றைக்கு டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் அனைத்துமே இருதாரத்தை மையமாக வைத்தே ஒளிபரப்பாகிறது. இளவரசி, முந்தானை முடிச்சு, முத்தாரம் என பெரும்பாலான சீரியல்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்த ஆண்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. அதேபோல அமைந்துவிட்டது ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications