"சின்னப் பாப்பா"வுக்குப் பெரிய பிரச்சினை.. அக்டோபர் 21ல் "பஞ்சாயத்து குழு" கூடுகிறது!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட பிரச்சினை ஒருவழியாக ஓய்ந்து விட்டது. இப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.

இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்தச் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இன்னும் ஒரு வருஷம்கூட ஆகலை. அதுக்குள்ள பிரச்சினையா என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படிங்க.
இரண்டு கோஷ்டி
நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இரண்டு கோஷ்டிகள் உருவானது.
மாஸ் ராஜினாமா
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவியான நளினிக்கு, எதிர்ப்பு வலுக்கவே, அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
நளினியும் ராஜினாமா
தலைவர், செயலாளர் தவிர மீதமிருந்த சங்க நிர்வாகிகளும் ஒட்டு மொத்தமா ராஜினாமா பண்ணவே. சங்க நிர்வாகமே ஸ்தம்பித்து வேற வழியில்லாமல் நளினியும் ராஜினாமா பண்ணிட்டாங்க.
பொதுக்குழு கூடுதுப்பா
அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவெடுக்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 21-ம் தேதி புதன்கிழமை காலைல விருகம்பாக்கம் கோல்டன் பாரடைஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெறப் போகிறதாம். அதில் நளினிக்கு எதிராக புயலை கிளப்பப்போகிறார்களாம்.
கேள்வி கேட்க ரெடி
ராதாரவியின் பிரச்சாரத்துக்காக சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டுனீங்க..? ஒட்டு மொத்த சங்கமே ஒரு தரப்புக்கு ஆதரவா போகலாமா? என்று எதிர்கோஷ்டியினர் கேட்கப் போகின்றனராம்.
நளினி ஜெயிச்சிட்டாங்களே
எதிர்கோஷ்டியினர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வாரோ நளினி...ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சரத்குமார் அணியில் போட்டியிட்ட நளினி எப்படியோ ஜெயிச்சிட்டாங்கப்பா... அந்த வகையில் நளினி ஹேப்பி அண்ணாச்சிதான்.












Click it and Unblock the Notifications