நியுஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் செய்தியாளரை தாக்கியதாக திமுகவினர் மீது புகார்
சிவகங்கை: காரைக்குடி அருகே செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது திமுகவினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையினை அப்பகுதியின் திமுகவின் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், திமுகவின் நகரத் தலைவருமான பொரி.பாலா என்பவர் குத்தகைக்கு நடத்தி வருகிறார். இரண்டு வருட காலமாக நகராட்சிக்கு எந்தவித வரியும் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் சார்பில் பாலாவுக்கு 8 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்ந்து தேவக்கோட்டை நகராட்சியில் நிலவி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழின் செய்தியாளர் பாலமுருகன் மீது திமுக நகரத்தலைவர் பாலா உட்பட 7 பேர் கொண்ட கும்பல் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உயிருக்கு போராடிய நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பாலமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செய்தியாளரைத் தாக்கிய பெரி பாலாவைக் கைது செய்து செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications