ரேஷ்.. என்னன்னு தெரியல.. வாழ பிடிக்கல.. நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. வைரலாகும் ஜெயஸ்ரீ ஆடியோ
ஜெயஸ்ரீக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சை நடந்து வருகிறது
Recommended Video
சென்னை: "ஹாய் ரேஷ்... என்னன்னு தெரியல, வாழ பிடிக்கல.. ரொம்ப சப்போர்ட் தந்தாய் நீ...லவ்யூ மா.. முடிஞ்சா அம்மாவை பார்த்துக்க.. இது குட்பை மெசேஜ்" என்று தற்கொலை முயற்சிக்கு முன்பு நடிகை ஜெயஸ்ரீ, தன்னுடைய தோழிக்கு வாய்ஸ் நோட் ஒன்றினை அனுப்பி உள்ளார்.
தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ-க்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. ஆபத்தான நிலையில்தான் இவரை மீட்டுள்ளனர்.. அவசர சிகிச்சைப் பிரிவில் இப்போதும் உள்ளார்.
பழம்பெரும் நடிகை லஷ்மிராவ்.. இவர் அந்த கால தமிழ் நடிகை.. எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.. சிறந்த பரதநாட்டிய கலைஞர்.. டான்ஸ் இயக்குனர்.. முன்னாள் பிரதமர் நேரு, குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத் போன்றோரிடம் அவார்ட் வாங்கியவர். இவரது மகள்தான் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ. இவரும் டான்ஸ் மாஸ்டர்தான்.

ஜெயஸ்ரீ
தனக்கென்று டிவி ரசிகர்களை பெற்றவர் ஜெயஸ்ரீ.. ஏற்கனவே கல்யாணமாகி டைவர்ஸ் ஆனவர்.. 8 வயது பெண் குழந்தையுடன் இருக்கும் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் என்பவர் கல்யாணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நன்றாகதான் வாழ்க்கை போனது.. திருவான்மியூர் எல்பி ரோட்டில் வசித்து வந்தனர்.. அப்போதுதான் இன்னொரு நடிகையுடன் ஈஸ்வருக்கு தொடர்பு என்ற புகார் கிளம்பியது.

சீரியல் உலகம்
இது ஒரு சாதாரண பிரச்சனை என்றுதான் அப்போது நினைக்கப்பட்டது. ஆனால் ஜெயஸ்ரீ, கமிஷனர் ஆபீஸ் போனதுமே விஷயம் சீரியஸ் ஆனது.. சீரியல் உலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சோஷியல் மீடியாவில் போன மாதம் முழுவதுமே இந்த தம்பதிகளின் குடும்ப பஞ்சாயத்துதான்.. கணவருக்கு கள்ள காதல், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், என்ற அடுக்கடுக்கான ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை பார்த்து பல சீனியர் நடிகர், நடிகைகளுக்கு இந்த தம்பதிகளுக்கு பல அட்வைஸ்களை தந்தனர். குழந்தைக்காக 2 பேரும் ஒன்று சேர வேண்டும் என்றும் அக்கறை கலந்த பாசத்துடன் அறிவுறுத்தினர்.

தூக்க மாத்திரை
கடந்த சில நாட்களாக இது சம்பந்தமான செய்தி எதுவுமே வராத நிலையில்தான், நேற்று ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி என்ற தகவல் பரவியது.. கூடுவாஞ்சேரியில் ஒரு நிகழ்ச்சிக்காக ஜெயஸ்ரீ போயுள்ளார்.. அப்போதுதான் உடம்பு சரியில்லை என்று சொல்லவும், "சரி நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு" என்று நண்பர்கள் சொல்லி அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் வீட்டுக்கு போகாமல் ஹாஸ்டலுக்கு சென்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிகிச்சை
ஹாஸ்டலுக்கு திரும்பிய நண்பர்கள்தான் ஜெயஸ்ரீ விழுந்து கிடப்பதை பார்த்து நீலாங்கரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஐசியூவில் சிகிச்சை நடந்து வருகிறது.. இதுகுறித்து அவரது அம்மா நீலாங்கரை போலீசில் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் தந்துள்ளார்.

ஆடியோ
ஜெயஸ்ரீ ஹேண்ட் பேக்கில் போலீசார் ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.. தன் குழந்தையை துன்புறுத்த வேண்டாம் என்று அதில் வேண்டுகோள் விடுத்தார்.. அதேபோல ஆடியோ மெசேஜும் அவர் வைத்திருந்தார். "ஹாய் ரேஷ்... எனக்கு என்னன்னு தெரியவில்லை ரொம்ப மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நான் ஒரு வேஸ்ட்... நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. எனக்கு வாழ பிடிக்கல.. எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் தந்தாய் நீ.

கடைசி மெசேஜ்
எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக்கறேன்.. என்கூட வந்து என் வீட்டிலேயே தங்கிக்கோ..ன்னு நீ சொன்னே.. அதுக்கு நன்றி. என் அக்கா என்கிட்ட எந்த அளவுக்குப் பேசுவாளோ அந்த அளவுக்கு நீ பேசினாய். மிக்க நன்றி. லவ்யூ மா.. முடிஞ்சா அம்மாவை பார்த்துக்க.. இது குட்பை மெசேஜ்" என்று இருந்தது. கண்ணீருடன் வலம் வரும் இந்த வாட்ஸ் அப் ஆடியோ நோட் சின்னத்திரை வட்டாரத்தில் திரும்பவும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications