கத்தியை விளம்பரத்துக்காக எதிர்க்கிறோம் என்பதா?: லைக்கா சுபாஷ்கரனுக்கு தி.வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: கத்தி திரைப்படத்தை விளம்பரத்துக்காக எதிர்க்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் கூறியுள்ளதற்கு 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டியக்கமான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனருமான தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த திரைப்படத்துக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் தடை விதிக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜிடம் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசி குமரன், மாணவர் அமைப்புகளின் பிரதிநிகள் எனப் பலரும் மனு ஒன்றை அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தி.வேல்முருகன் கூறியதாவது:
தமிழக சட்டமன்றத்தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுடன் வர்த்தக உறவுகளை வைத்திருப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான கத்தி திரைப்படம் வெளியிடப்படக் கூடாது.
இது தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு எதிரானது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. நாங்கள் விஜய்யை, முருகதாஸை எதிர்க்கவில்லை.
லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் எங்கள் கூட்டமைப்பை சந்திக்க இருப்பதாக அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்ட பொய்யை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்.
இந்த கூட்டமைப்பை நடத்துகிற தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்றவை ஒன்றும் விளம்பரம் தேட அவசியத்தில் இல்லை.
ஆனால் லைக்காவின் சுபாஷ்கரனோ, நாங்கள் விளம்பரம் தேடுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதை மிக மிக வன்மையாக கடுமையாக நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு தி.வேல்முருகன் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications