தி. வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனை!
சென்னை: தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.

இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைகள் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகள், அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications