நல்ல வேளை நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு "தல, தளபதி" வரல!
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட்போட்டியை கிண்டல் செய்து பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் தமிழ் திரையுலகினர் சேர்ந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மக்கள் நட்சத்திர கிரிக்கெட்டை ட்விட்டரில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
|
கூட்டமே இல்லை
நட்சத்திரங்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க அரங்கு நிறையும் என்று எதிர்பார்த்த நிலையில் பார்வையாளர்கள் மிக குறைந்த அளவே உள்ளதை பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.
|
தல, தளபதி
நல்ல வேலை #Thala , #Thalabathy வரல..__/\__
காத்து வாங்குற Stadium கலவர பூமி ஆகிருக்கும்.#StarCricket to #StarWar #NatchathiraCricket என அஜீத், விஜய் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காதது குறித்து ராஜராஜ சோழன் தெரிவித்துள்ளார்.
|
விஷால்
'ஐயோ விஷால் 0 ரன் இதுக்கு தான் இந்த பில்ட்டப்பா ? #NatchathiraCricket'. நவரச நாயகன் கார்த்திக்கின் பந்துவீச்சில் விஷால் அவுட்டாகிவிட்டார். அதை தான் மணிமாறன் இப்படி கலாய்த்துள்ளார்.
|
கூட்டம்
நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. இதனால் மைதானம் காத்து வாங்குவதை பிரஜீவ் அவர் பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
|
நல்ல வேளை
நட்சத்திர கிரிக்கெட் போட்டி எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு போட்டோ போட்டு சூப்பராக கூறிவிட்டார் சுகன்.
|
சூர்யா
சேப்பாக்கத்தில் பகல் மேட்ச்சில உச்சி வெயிலில டாஸ் வின் பண்ணிட்டு ஃபீல்டிங் எடுக்கிற முதல் ஆள் நீ தான்! சூர்யா மாஸ் என்கிறார் சீனி மாமா.












Click it and Unblock the Notifications