தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழக்கு... சுகேஷுக்கு ஜூலை 11 வரை காவல் நீட்டிப்பு
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷுக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு போட்டி போட்டதால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. எனினும் அதற்கு உரிமை கோரி பிரமாண பத்திரங்கள் இரு அணியினரும் தாக்கல் செய்து வந்தனர்.

இந்நிலையில் இரு அணியிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர கோரி டெல்லி புரோக்கர் சுகேஷிடம் தினகரன் லஞ்சம் கொடுத்த குற்ரச்சாட்டின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தினகரனின் நண்பர் மல்லியும் கைது செய்யப்பட்டார்.
பின்பு இருவரும் கடந்த மே 1-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே தினகரனும், மல்லியும் டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இரண்டு, மூன்று முறை அந்த மனுவின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இருவருக்கு்ம ஜாமீன் கிடைத்தது. அவர்கள் சென்னை வந்தனர்.
சுகேஷின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது காவலை வரும் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
