தனி திராவிட நாடு என்பது வேலையில்லாத கம்யூனிஸ்டுகளின் வேலை- கொந்தளிக்கும் ட்விட்டர்வாசிகள்!
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோஷம் கிளம்பியுள்ள நிலையில் அதற்கு டுவிட்டரில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திராவிட நாடு கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில் டுவிட்டரில் உலா வந்துள்ள கருத்துகளை தொகுத்துள்ளோம்.
மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மாட்டுக்கறி திருவிழா நடத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களோ நிச்சயமாக இந்த உத்தரவை அமல்படுத்தவே முடியாது என அறிவித்து வருகின்றன.

தனிதிராவிடம் கோரிக்கை
இந்நிலையில் திடீரென #dravidanadu என்ற ஹேஷ்டேக் போட்டு கேரளா நெட்டிசன்கள் ட்விட்டரில் கருத்துகளை பதிவு செய்யத் தொடங்கினர். இதற்கு டுவிட்டரில் எதிர்ப்பும் ,ஆதரவும் பெருகி வருகிறது. அவற்றில் சில உங்களுக்காக...
|
இந்தியாவின் தத்துவங்கள்
தனக்கு இந்தியாவின் தத்துவங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை மோடியும், காவி இயக்கத்தினரும் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு காலம்தான் பதில் சொல்லும்.
|
குண்டுதுளைக்காதவை
பெரியாரும், அண்ணாதுரையும் தற்போது உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் வகுத்த சித்தாந்தங்கள் இன்னும் உயிர்ப்போடு உள்ளன. அவை குண்டு துளைக்காதவை.
|
முட்டாள்கள் அல்ல
பாஜகவே இத்தோடு உங்கள் ஹிந்துத்துவ கொள்கையை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் நாங்கள் அதை சேதப்படுத்துவோம். நாங்கள் முட்டாள்கள் அல்ல. திராவிட நாடு என்பது மதச்சார்பின்மையான இடமாகும்.
|
வலையில் சிக்கக் கூடாது
தனிதிராவிடம் கேட்டு வரும் டுவிட்டர் பதிவுகள் இந்தியாவில் அமைதியை குலைக்க கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளிடம் இருந்து வருகிறது. அவர்கள் விரித்த வலையில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.
|
இந்தியாதான் வேண்டும்
தனி திராவிடம் என்பது வேலையில்லாத கம்யூனிஸ்ட்டுகளின் கனவாகும். தென்னிந்தியர்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. கன்னடர்களாகிய நாம் இந்தியாவையே விரும்பும்.
|
முட்டாள்தனம்
திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கையானது மோடியின் முட்டாள்தனமான முடிவுகளால் ஏற்பட்ட விளைவு. எங்களது உரிமையையும், அடையாளத்தை அழிக்க விடமாட்டோம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.
|
மோடிக்கு நன்றி
திராவிட நாடு குறித்து தமிழகம் பேசி வருகிறது. தென்னிந்திய மாநிலங்கள் திராவிட நாடு குறித்து பேசியதற்கு மோடிக்கு நன்றி.
|
என்ன தவறு?
தனிதிராவிடத்தில் என்ன தவறு உள்ளது. மலையாளம் என்பது தமிழ்மொழியின் மகளாகும். நாம் அனைவரும் நெருங்கிய உறவினர்கள்தான்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications