ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேனின் 2 கூட்டாளிகள் கைது.. ஒருவர் இலங்கையர்
சென்னை: சென்னையில் சிக்கிய ஐஎஸ்ஐ உளவாளியான இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இருவரை போலீஸார் கைது செயதுள்ளனர்.
கைதான இருவரில் சிவபாலன் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். இன்னொருவர் பெயர் முகம்மது சலீம்.

கடந்த 29ம் தேதி சென்னையில் வைத்துச் சிக்கினார் உசேன். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியும் ஆவார். இவரிடமிருந்து பல பரபரப்புத் தகவல்கள் சிக்கின. சென்னைக்குத் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இவர் கைதான அடுத்த 2 நாட்களிலேயே அதாவது நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததால் பரபரப்பு கூடியுள்ளது. தற்போது கியூ பிரிவு போலீஸாரின் தீவிர விசாரணைக்கு உசேன் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் உசேனிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரது கூட்டாளிகள் இருவரைப் போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஒருவர் பெயர் முகம்மது சலீம். இன்னொருவர் சிவபாலன்.
இவர்கள் தங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்திய போலீஸார் அங்கிருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடமும் தற்போது கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications