சென்னை மதுரவாயலில் அரசுப் பேருந்து- தனியார் பேருந்து மோதல்: ஒருவர் பலி; 10 பேர் காயம்
சென்னை: சென்னை மதுரவாயலில் அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் பலியானார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி நேற்றிரவு ஒரு அரசுப் பேருந்து மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அடுத்த பெரியபணிச்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
இதனால் அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் வேகமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஏசி பேருந்து அந்த அரசு பேருந்தின் பின்பகுதியில் மோதியது.
இதில் தனியார் பேருந்தில் இருந்த மற்றொரு ஓட்டுனர் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேகமாக மோதியதால் அரசு பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்த பயணிகள் மற்றும் தனியார் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்த பயணிகள், சாலையை கடக்க முயன்ற நபர் என 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் இதே சாலையில் சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து எஞ்சினியரிங் மாணவி பலியானார். 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications