கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாளேயான பெண் குழந்தை கடத்தல்
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தியது தொடர்பாக நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி ஜோதி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை வியாழக்கிழமை திடீரென்று காணமால் போனது. இதனை கண்ட ஜோதி அதிர்ச்சி அடைந்தார்.

மருத்துவமனை நிர்வாகத்திடமும், போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்தபோது பிற்பகல் 1 மணி அளவில் ஒரு ஆணும், 3 பெண்களும் அந்த பெண் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையை கடத்திய அந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தப்பட்ட பெண் குழந்தை வெள்ளக்கிணறு பகுதியில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்து ராஜன், ஜோதி தம்பதியினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகன எண்ணைக் கொண்டு துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிடிபட்ட நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தென்காசியில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications