தூங்கி வழிந்த டிரைவர்.. அன்னூர் அருகே மரத்தில் வேன் மோதி குழந்தை உட்பட 2 பேர் பலி!
ஊட்டிக்கு சுற்றுலா வேன் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை: ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சார்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் உதகைக்கு நேற்று சுற்றுலா செல்ல கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.

வேன் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த புகளூர் என்ற இடத்தில் சென்று வந்துகொண்டிருந்தது. அப்போது வேன் ஓட்டுனர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வேன் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் அதிவேகத்தில் மோதியது. இதில் வேனில் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை ரிஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மேலும் படுகாயம் அடைந்த 10 க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வேன் மரத்தில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications