உல்லாசத்துக்கு இடையூறு.. இரண்டரை வயதுக் குழந்தையைக் கொன்று வீசிய கள்ளக்காதல் ஜோடி!
கடலூர் அருகே இரண்டரை வயது குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசிய விவகாரத்தில் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றது தெரியவந்துள்ள
கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் இரண்டரை வயது குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசிய விவகாரத்தில் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த முகமது அலி. தள்ளுவண்டியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் இவரது முதல் மனைவி ஆஷாவுக்கும இரண்டரை வயதில் ஆஷா என்ற பெண் குழந்தை இருந்தது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர்கள் பிரிந்து விட்டனர். குழந்தை ஆஷா அவரது தந்தையிடம் வளர்த்து வந்தார்.

மாயமான குழந்தை
இதையடுத்து முகமது அலி வேலூரைச் சேர்ந்த சகீலா பானுவை 2வது திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி குழந்தை ஆஷா திடீரென மாயமானது.

தண்ணீர் தொட்டிக்குள் மிதந்த குழந்தை
உறவினர்கள் பல இடங்களில் குழந்தையை தேடி பல இடங்களில் அலைந்தனர். அப்போது முகமது அலி வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை என கண்டுபிடிப்பு
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் குழந்தை கழுத்தை நெறித்து கொன்று பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டது தெரியவந்தது.

சகிலா பக்கம் திரும்பிய சந்தேகம்
குழந்தை சகிலா பானுவுடன் இருந்தபோதுதான் கொல்லப்பட்டது என்பதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சகிலா பானுவும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து குழந்தையை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசியதைக் கேட்டு அதிர்ச்சியந்தனர்.

கள்ளக்காதல் அம்பலம்
இதையடுத்து சகிலா பானுவையும் அவரது கள்ளக்காதலன் பூவராக மூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சகிலா பானுவுக்கும் பூவராக மூர்த்திக்கும் கடந்த 2 மாதங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது.

உல்லாசத்துக்கு இடையூறு
முகமது அலி வியாபாரத்துக்கு வெளியே சென்ற பிறகு இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கு குழந்தை ஆஷா இடையூறாக இருந்துள்ளது.

கழுத்தை நெரித்து கொலை
கடந்த 3ஆம் தேதி சகிலா பானு வீட்டிற்கு சென்ற பூவராக மூர்த்தி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை ஆஷா சத்தம்போ ட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பூவராக மூர்த்தி குழந்தை ஆஷாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

தண்ணீர் தொட்டிக்குள்
பின்னர் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து இருவரும் சேர்ந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளனர். இதனை வாக்குமூலமாகவும் பூவராகமூர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications