கோவை- வீட்டில் புகுந்து பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இருவர் கைது
கோவை: பெண் தொழிலாளியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் முதல் டிவிஷனை சேர்ந்தவர் பாப்பாத்தி (45). கூலித் தொழிலாளியான பாப்பாத்தி எஸ்டேட் குடியிருப்பில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை பாப்பாத்தியின் வீட்டிற்குள் அதே எஸ்டேட்டை சேர்ந்த மூன்று பேர் உள்ளே நுழைந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர்.
பாப்பாத்தியின் கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த முடீஸ் போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணகுமார் (வயது-21), ரதீஷ்குமார் (வயது-21) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாகவுள்ள மூன்றாவது குற்றவாளியான சபரீஸ்வரனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications