அரியலூர் அருகே மினி வேன் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலி

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் அருகே மினி வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் பார்ப்னஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் கணேசன் மகள் பிரியதர்ஷினி (11). இவர் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கணேசன் தனது மகளை அழைப்பதற்காக தனது டூவிலரில் பள்ளி முடித்து விட்டு வந்த பிரியதர்ஷினி மற்றும் அவரது மனைவி தேவி, அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை அழைத்து கொண்டு தனது சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பி கொண்டு இருந்தார்.

 two killed in a road accident near Ariyalur

அப்போது சில்லக்குடி அருகேயுள்ள மருதையாறு பாலம் அருகே வந்த போது, எதிரே வந்த மினி வேன், கணேசன் டூவிலர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நால்வரும் படுகாயம் அடைந்தனர். இதில் மாணவி பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணேசன் அரியலூர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவி மற்றும் சந்தோஷ் அரியலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+