நெல்லை அருகே அரசு பஸ் - கார் மோதல்... 2 பேர் பலி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கர் மற்றும் புளியங்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் ஜீப் ஓட்டுநர் சுந்தர்ராஜ் ஆகியோர் ஒரு காரில் நெல்லைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஆசிரியர் வேல்முருகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.

அப்போது ஆலங்குளம் அருகே உள்ள சிவலார் குளம் விளக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, செங்கோட்டையில் இருந்து நாகர்கோவிலுக்கு பராமரிப்பு பணிக்காக அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேரூந்தை ஓட்டுநர் சண்முகசாமி என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது சிவலார் குளம் விலக்கு அருகே பேருந்து சென்றபொழுது எதிபாராத விதமாக அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த சுந்தர்ராஜ், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிய வேல் முருகன் காயத்துடன் உயிர்தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த வேல்முருகனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications