தமிழகத்தில் மேலும் இரு முதலமைச்சர்கள் "கண்டுபிடிப்பு"!
மதுரை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களின் முதல்வர் ஜெயலலிதா என இரு முதல்வர்கள் தமிழகத்தில் இருப்பதாக கருதி வரும் மக்களுக்கு ஒரு நற்செய்தி.. தமிழகத்தில் தற்போது மேலும் இரு முதல்வர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க, தெரிவிக்க, புரிய வைக்க வேண்டி, மதுரை பக்கம் போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்தியுள்ளனர் காங்கிரஸார்.

காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் முடிந்தது, கோல்மால் அரசியல் முடிந்தது என்று பலரும் எண்ணி வந்த வேளையில் புது கலக்கலை எடுத்து விட்டுள்ளனர் காங்கிரஸ் தலைகள்.
மதுரையில் ஒரு போஸ்டரைப் பார்க்க முடிந்தது. அதில் கிராமத்து பண்ணையார் கெட்டப்பில், நாட்டாமை சரத்குமார் கெட்டப்பில், கார்த்தி ப.சிதம்பரம் ஒரு ஒரு பெரிய சேரில் அசால்ட்டாக உட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே செம ஸ்டைலுங்கோ...!
பக்கத்தில் வாசகங்கள்... கோட்டையை ஆளப் போகும் இளைஞர்களின் முதல்வரே என்று பிரமாண்ட வாசகம். அதில் முதல்வரே என்ற வார்த்தைையை கொட்டை எழுத்துக்களில் போட்டு வைத்துள்ளனர். வலது ஓரம் அப்பா ப.சிதம்பரம் சிரிக்கிறார்.. கீழே போஸ்டர் உபயதாரர் பள பளவென பற்களைக் காட்டியபடி சிரிக்கிறார்... சிலிர்க்கிறது பார்க்கவே!

அடுத்து இன்னொரு போஸ்டர். இது தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் கோந்து போட்டு சுவரில் ஒட்டியது. இதை மத்திய சென்னை காங்கிஸார் ஒட்டியுள்ளனர்.
அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் லெப்ட் சைடில் சிரித்தபடி ஒய்யாரமாக காட்சி தருகிறார். வலது ஓரம் நேரு மேலே புன்னகைக்கிறார். போஸ்டரின் நட்ட நடுவே முதல்வர் என்று பெரிய எழுத்துக்கள். உள்ளுக்குள் ஈவி.கே.எஸ் என்று பொதிந்து வைத்துள்ளனர்.
அதற்கு மேலே தொண்டர்களின் முதல்வர் என்று எழுதி வைத்துள்ளனர். இதைப் பார்த்தாலும் சிலிர்த்தது....!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications