ஆர்கே நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு: 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கூடுதலாக வரவழைப்பு..!
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்கே.நகர் தொகுதியில் இன்னும் ஒருவாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

மேலும் தேர்தலை சீர்குலைக்க அதிமுக அம்மா கட்சியினர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நேர்மையாக தேர்தலை நடத்தவும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 8 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாநகர காவல்துறையுடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 25 குழுக்களாக பிரிந்து ஆர்கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக துணை ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications