போலீசுக்கே போன் மூலம் டார்ச்சர்.... அசராமல் 800 முறைக்கும் மேல் போன் செய்த தில்லாலங்கடிகள்
கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 800 முறைக்கு மேல் போன் செய்து ஆபாசமாகப் பேசியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை: கோவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் இருவர் போன் செய்து கெட்ட வார்த்தைகளில் பேசி, போலீஸையே துன்புறுத்தியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு பேர் கடந்த ஒன்றரை மாதங்களாக வெவ்வேறு போன் நம்பர்களில் இருந்து பேசியுள்ளனர். அவர்கள் ஆண் போலீசார் போன் எடுத்தாலும் கெட்ட வார்த்தைகளிலும், பெண் போலீஸார்ப் போன் எடுத்தால், ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் துணை கமிஷனர் லத்சுமி ஆகியோரிடம் புகார் அளித்தனர். கமிஷனர் அமல்ராஜ், இந்தப் புகாரை விசாரிக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த இருவரையும் கைது செய்தனர்.
ஒருவர் வேடப்பட்டியைச் சேர்ந்த லேத் வேலை செய்யும் தொழிலாளி ஶ்ரீகாந்த். மற்றொருவர் ஒத்தக்கால் மணடபத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செல்வராஜ் என தெரியவந்தது.
இதில் ஶ்ரீகாந்த் 10 சிம்கார்டுகளிலிருந்து 650 முறையும், செல்வராஜ் அதேபோல் 10 சிம்கார்டுகளை மாற்றி 842 முறையும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியுள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications