தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
சென்னை: தமிழகத்திற்குள் பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர் உசேன் போன்று மேலும் 2 பேர் ஊடுருவியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அவர்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
கடந்த 30ம் தேதி சென்னையில் இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் தான் தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜாகீர் உசேனை க்யூ பிரிவு போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஜாகீர் உசேன் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் விவரம் வருமாறு,
பாகிஸ்தான் ஆதரவளிக்கும் தீவிரவாதிகள் இலங்கையில் தங்கி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவி மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அவர்கள் முதலில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் அடுத்ததாக பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் தாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, சுதந்திர தின விழா அல்லது டிசம்பர் 6ம் தேதி அதாவது பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகிய நாட்களில் தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஜாகீர் உசேன் போன்று மேலும் 2 உளவாளிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜாகீர் உசேன் தனக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து அனுப்புவதே தனது வேலை என்று தெரிவித்துள்ளாராம்.
கோவை
ஜாகீர் உசேன் முன்னதாக 4 முறை தமிழகம் வந்துள்ளாராம். அவர் ஒரு முறை திருச்சி வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார். மற்றொரு முறை கோவைக்கு சென்று தங்கியுள்ளார். அவர் கோவையில் எங்கு தங்கினார், அவருக்கு தங்க இடம் கொடுத்தது யார், அவருக்கு இடம் கொடுத்தவருடன் சேர்ந்து ஏதாவது சதித்திட்டம் தீட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஜாகீரை கோவை அழைத்து சென்று விசாரிக்க க்யூ பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். ஆனால் அவரை கோவைக்கு என்று அழைத்துச் செல்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications