தெற்கு சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மகன்களை மீட்க பெற்றோர் கோரிக்கை!
தெற்கு சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தங்களது மகன்களை மீட்டு தர அவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நெல்லை: தெற்கு சூடானில் கடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த தமிழக பாஜக தலைவரின் உறவினர் மகன் உள்ளிட்ட இரண்டு பொறியாளர்களை மீட்டு தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த முத்து விஜயபூபதி மகன் மிதுன் கணேஷ் மற்றும் களியக்காவிளையை சேர்ந்த எட்வர்ட் அம்புரோஸ் ஆகிய இருவரும் பொறியாளர்களாக தெற்கு சூடானில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் இருதினங்களுக்கு முன்பு தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்ற போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் தமிழக பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுர்ந்தரராஜனின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications