ஜெயலலிதா பெயர் சூட்டிய புலிக்குட்டி 'சித்ரா' பலி.. மேலும் ஒரு புலியும் இறந்தது!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு வெள்ளைப் புலிகளான அனு- பீஷ்மர் ஜோடி சேர்ந்தது. அனு, 4 குட்டிகளை ஈன்றது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஜெயலலிதா பூங்காவுக்கு நேரில் வந்து இந்த 4 வெள்ளை புலி குட்டிகளுக்கும் சித்ரா, வித்யா, ஆர்த்தி, காவேரி என பெயர்களை சூட்டினார்.
இந் நிலையில் கடந்த மாதம் சித்ரா என்ற வெள்ளை புலிக்குட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதன் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, அதன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
5 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் புலிக்குட்டிக்கு உடல்நிலை சீரானது. மீண்டும் பார்வையாளர்கள் பார்க்க அந்த புலிக்குட்டி விடப்பட்டது. ஆனால் நேற்று காலை வெள்ளை புலிக்குட்டி சித்ரா, திடீரென இறந்து விட்டது.
இறந்த வெள்ளை புலிக்குட்டியை பூங்கா வளாகத்திலேயே ஊழியர்கள் அடக்கம் செய்தனர்.
இந் நிலையில் பூங்காவில் உள்ள 14 வயதான வங்கப் புலியான தேவிக்கு உடல் நிலை சரியில்லாததால் இரண்டு கால்களும் செயலிழந்தன. இதனால் அவதிப்பட்டு வந்த வங்க புலி நேற்று முன்தினம் பரிதாபமாக செத்தது.
இந்த வங்க புலி கடந்த 2006ம் ஆண்டு விசாகப்பட்டினம் பூங்காவில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10 நாட்களுக்கு முன் தனக்குப் பிறந்த இரு குட்டிகளை வங்கப் புலி ஒன்று கொன்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அவை வேறு நிறத்தில் இருந்ததால் இரண்டையும் அந்தத் தாய்ப் புலி கொன்றுவிட்டது.
இப்போது இந்தப் பூங்காவில் 12 வெள்ளைப் புலிகளும், 9 வங்கப் புலிகளும் உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications