திருவண்ணாமலை அருகே கிணறு தோண்டும் விபரீதம்... மண் சரிந்து 2 பேர் பலி!
திருவண்ணாமலை அருகே கிணறு தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: செங்கம் அருகே கிணறுதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மண்சரிந்து விழுந்ததில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு தோண்டும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ், கண்ணன் ஆகிய கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மண் சரிந்தது. நடப்பதை சுதாரிப்பதற்குள் மண் முற்றிலும் சரிந்து விழுந்து 2 பேரையும் மூடியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணறு தோண்டும் பணியின் போது தொழிலாளர்கள் 2 பேர் மண் சரிந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications