'வீடியோ கான்பரன்சிங்' மூலம் பிரசாரம் செய்ய திட்டம்
நெல்லை: வெளியில் வந்து பிரசாரம் செய்தால் போலீஸாரால் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியல் களம் புகுந்துள்ள கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர்களான உதயகுமாரும், மை.பா.ஜேசுராஜ் ஆகியோரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரசாரம் செய்யவுள்ளனர்.
இவர்களோடு புஷ்பராயனும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இவர்கள் மூவரும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர்.

இந்த மூன்று பேர் மீதும் போலீஸார் தாறுமாறாக வழக்குகளைப் போட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதனால்தான் அவர்கள் 3 பேரும் இடிந்தகரையை விட்டு வெளியே வராமல் அங்கேயே தங்கியுள்ளனர்.
தற்போது இங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரசாரம் செய்ய மூவரும் திட்டமிட்டுள்லனர். இன்று நெல்லையில் நடைபெறும் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மூவரும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசவுள்ளனர்.
இன்று மாலை நடைபறும் கட்சிக் கூட்டத்திலும் இந்த மூவரும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசத் திட்டமிட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரத்தையும் முழுமையாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
அப்படி நடந்தால் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரசாரம் மேற்கொண்ட முதல் தலைவர் என்ற பெயர் உதயகுமாருக்குக் கிடைக்கும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications