சொத்து விவரத்தை வெளியிட்ட உதயகுமார், மை.பா.ஜேசுராஜ்!

நேற்றுதான் இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவதாக அறிவித்தனர். இக்கட்சி தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் செயல்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் இன்று இருவரும் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...
அரசியலில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் சொத்துக்கணக்கை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும், பொதுவாழ்வில் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையோடு எளிய மக்கள் கட்சியில்இணைந்திருக்கும் தோழர்கள் சுப. உதயகுமாரும், மை. பா. ஜேசுராஜும் தங்கள் சொத்து விபரங்களை இங்கே வழங்கியிருக்கிறார்கள்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்கள் மீது எந்தவித ஆதாரமுமின்றி பல்வேறுக் குற்றச்சாட்டுக்களை சுமத்திய காங்கிரசுக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இவர்கள் குடும்பத்தைச் சார்ந்த பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோரும் தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
அது போல பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் மூத்தத் தலைவர்கள் தங்கள் சொத்துக்கணக்கை அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
பிரதமர் மன்மோகன் சிங் அரசின் உள்துறை அமைச்சகம் 170 குழந்தைகள் படிக்கும் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கும் சுப. உதயகுமாரின் சாக்கர் அறக்கட்டளை கணக்குகளை தமிழக அரசின் சிபி-சிஐடி துறையின் வழியாக சல்லடைப் போட்டு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு சுப. உதயகுமார் இரண்டு ஆண்டுகளாக முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இதே போன்று சோனியா காந்தி தலைமை தாங்கி நடத்தும் "ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன்" மற்றும் பல்வேறு காங்கிரசு மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் அறக்கட்டளைகள் கணக்குகளையும் மத்திய அரசு முறைப்படி ஆய்வுசெய்யக் கோரிக்கை வைக்கிறோம்.
சுப. உதயகுமார் சொத்து விபரம்:
பெற்றோர், மனைவி, மற்றும் உதயகுமார் பெயர்களில் இருக்கும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் விபரம்:
[1] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் கிராமம், இசங்கன்விளை ஊரில் 10 சென்ட் நிலம் மற்றும் கான்கிரீட் வீடு. வாங்கிய காலம்: 1994.
[2] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் கிராமம், கீழ ராமன்புதூர் ஊரில் 15 சென்ட் நிலம்; 2 கான்கிரீட் கட்டிடங்கள், மற்றும் 1 ஓட்டுக் கட்டிடம். வாங்கிய காலம்: அம்மா பங்கு சொத்து; மற்றும் 2005.
[3] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை A கிராமத்தில் 3.77 ஏக்கர் நிலம் (2 கான்கிரீட் வகுப்பறைக் கட்டிடங்கள், தென்னைத் தோட்டம்). வாங்கிய காலம்: 1994 முதல் 2000 வரை.
[4] குமரி மாவட்டம், தோவாளை வட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் 8 ஏக்கர் 43.5 சென்ட் ரப்பர் மற்றும் தென்னைத் தோட்டம். வாங்கிய காலம்: 1998-1999.
[5] குமரி மாவட்டம், தோவாளை வட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் 45, 46 சென்ட் காலியிடங்கள். வாங்கிய காலம்: 2008.
[6] குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், திருப்பதிசாரம் கிராமத்தில் 12 சென்ட் நாற்றங்கால். வாங்கிய காலம்: 1972.
[7] சாக்கர் பள்ளி வாகனங்கள் (மகிந்திரா, ஐஷர்): 2
[8] மகிழுந்து (பயன்படுத்தப்பட்ட அம்பாசடர்): 1
[9] அம்மாவின் நகைகள்: 15 சவரன்.
[10] மனைவியின் நகைகள்: 90 சவரன்.
[11] மொத்த நகைக் கடன்: ரூ. 3 லட்சம்.
மை.பா. ஜேசுராஜ் சொத்து விபரம்:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மேல கடையம் கிராமத்தில் 27.62 ஏக்கர் நிலம். வாங்கிய காலம்: 2006.
மேற்கண்ட சொத்துக்களன்னியில் வேறு ஏதாவது சொத்துக்கள் வாங்கினால், அவற்றை வாங்குவதற்கான பணம் வந்த மூலம், விதம் பற்றிய தெளிவான, உண்மையான தகவல்களை மக்களுக்கு உடனேத் தெரிவிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications