அதுக்காக இப்படியா ஆபாசமா படம் போடுவீங்க உதயநிதி??
2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை குறிப்பிடும் வகையில் உதயநிதி ஸ்டானில் டுவிட்டரில் ஆபாசமான சித்திரம் ஒன்றை போட்டுள்ளார்.
சென்னை : 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வித்தியாசமான முறையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆபாசமாக ஒரு படத்தை போட்டு எரிச்சலுக்கு பர்னால் போட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் போட்டுள்ள டுவிட்டுக்கு பலரும் பதில் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு திமுகவினருக்கு அளவு கடந்த கொண்டாட்டத்தை கொடுத்தது. தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின் போது திமுக செயல்தலைவர் ஸ்டாலினே பத்திரிக்கையாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திமுகவின் மீது இருந்த களங்கம் துடைக்கப்பட்டுள்ளதாக திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் குதூகலித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் திமுகவினர் கொண்டாட்ட மோடில் இருக்க, எதிர்கட்சியினர் விமர்சன மோடில் இருக்கின்றனர்.
— Udhay (@Udhaystalin) December 21, 2017
இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின் ஆபாசமான ஒரு படத்தை போட்டு எரிச்சலுக்கு பர்னால் போடுங்கள் என்று நக்கலாக ஒரு டுவீட்டை போட்டுள்ளார். திமுக மகிழ்ச்சியை கொண்டாடுவது சரி அதற்காக இப்படியா ஆபாசமா ஒரு படத்தை போடுவாரு தளபதி வாரிசு என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்த டுவீட். உதயநிதியின் இந்த டுவீட்டுக்கு பலரும் விமர்சனங்களை போட்டு வருகின்றனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications