கேலி செய்ததால் செருப்பால் அடித்த உமா.. பழி தீர்க்க பலாத்காரம் செய்து கொன்றதாக கைதானோர் வாக்குமூலம்

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று நான்கு பேர் கைதானதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இரு காம வெறியர்கள் மட்டுமே கைதாகியுள்ளதாகவும், 2 பேர் தப்பி விட்டதாகவும், அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான இருவருமே சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தவர்கள். தினக் கூலிகள். இவர்கள் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தைப் பார்க்கும்போது கடுமையான ஆத்திரமே வருகிறது... அந்த அளவுக்கு பெண்களை காமத்தனமாக பார்த்து கொடூரமாக நடந்துள்ளனர் இந்த இரு அயோக்கியர்களும்.
அவர்களின் வாக்குமூலம்....
தினசரி மது அருந்துவோம்
நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.500 கூலி கிடைக்கும். தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம்.
சிப்காட் வளாகத்தில் நடந்து வந்தபோது
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.
நள்ளிரவில் தனியாக நடந்து வந்த உமா மகேஸ்வரி
அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார்.
கையைப் பிடித்து இழுத்து கிண்டல்
அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம்.
செருப்பால் அடித்தார்
இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.
அடைந்து தீர முடிவெடுத்தோம்
உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13-ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.
அடித்து உதைத்தோம்
போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச் சென்றோம்.
புதரில் வைத்து பலாத்காரம்
அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை, கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் உல்லாசம் அனுபவித்தோம்.
முகத்தில் எச்சிலால் துப்பினார்
எங்கள் காம இச்சை தணிந்தபோது, உமா மகேஸ்வரி மயக்கமானார். அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம். இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார்.
கத்தியை எடுத்து அடி வயிற்றில் குத்தினோம்
அவரை உயிரோடு விட்டால் எங்களை போலீசில் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்தோம். இதனால் நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை.
கழுத்தையும் அறுத்த கொடூரம்
இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.
கல்பாக்கத்திற்குத் தப்பினோம்
நாங்கள் இருவரும் கல்பாக்கத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தோம். பத்திரிகைகளில் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி எதுவும் வரவில்லை. எங்களது கூட்டாளிகள் மற்ற இருவரும் தனியாக சென்றுவிட்டனர். கடந்த 2 நாளுக்கு முன்பு பத்திரிகை செய்தியை தமிழ் தெரிந்தவர்கள் மூலம் படித்தபோது உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வந்தது.
தைரியமாக இருந்தோம்
இருந்தாலும், கொலையாளிகள் யார் என்பது பற்றி போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதனால் தைரியமாக இருந்தோம். தப்பிச்செல்லும்போது உமா மகேஸ்வரியின் செல்போனையும், வங்கி கிரெடிட் கார்டையும் எடுத்து வந்துவிட்டோம். நாங்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர் என்று இந்த இரு அயோக்கியர்களும் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications