மச்சினிச்சி மீது 7 லோடு டிராக்டர் மண்ணை கொட்டிய காமுகன்.. தர்மபுரி ஜாலி மாமா பொறியில் சிக்கியதெப்படி
தர்மபுரி: தருமபுரி அருகே ஒசஅள்ளி புதூர் கிராமத்தில் அக்கா கணவர் அனுமந்தன், மச்சினிச்சி ராஜேஸ்வரியை உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இந்த கொலை எதற்காக நடந்தது? மச்சினிச்சியை கொன்ற மாமா எப்படி போலீசில் சிக்கினார்? போலீசில் அவர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் என்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
அனுமந்தன் 40 வயதுடைய கட்டிட மேஸ்திரி ஆவார்.. அனுமந்தனின் மனைவி முனியம்மாள்... இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். முனியம்மாளின் தங்கை பெயர் ராஜேஸ்வரி,.

ராஜேஸ்வரிக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால் கணவர் பிரபு பில்டிங் கான்ட்ராக்டர் என்பதால், தற்சமயம் வேலை நிமித்தமாக பெங்களூருவில் தங்கி உள்ளார்.. இதனால் அக்கா, தங்கை 2 குடும்பங்களும் கடந்த 8 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள்..
கட்டிட கான்ட்ராக்டர்
இந்நிலையில், அனுமந்தன், ராஜேஸ்வரி இடையே பழைய திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.. சம்பவத்தன்று இருவரும் பேசி கொண்டிருந்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
அப்போது ஆவேசமடைந்த அனுமந்தன், அருகிலிருந்த கல்லை எடுத்துக் கொண்டு ராஜேஸ்வரியின் தலையிலே போட்டார். ராஜேஸ்வரி மயங்கி விழுந்ததுமே, அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்த அனுமந்தன், அங்கிருந்த பள்ளத்தில் தள்ளி மண்ணை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதற்கு பிறகே தகவலறிந்து வந்த போலீசார் அனுமந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
என்ன நடந்தது உண்மையில்?
அனுமந்தன் இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார். பிரபுவும், அனுமந்தனும் பங்காளி முறை கொண்டவர்கள். அதாவது இவர்களை சகோதரிகளான ராஜேஸ்வரியும், அவரது அக்காவும் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூருவில் தங்கி உள்ள பிரபு மாதத்தில் ஒருமுறை மட்டும் சொந்த ஊருக்கு வந்து போவாராம்.,
ராஜேஸ்வரி, அனுமந்தன் இருவரின் தகாத உறவு, அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது.. இதனால் ராஜேஸ்வரி, அந்த உறவை மேலும் நீட்டிக்க விரும்பாமல், தன்னுடைய 2 குழந்தைகளுக்காக திருந்தி வாழ நினைத்துள்ளார்.. இதற்காக அனுமந்தனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.
அனுமந்தன் உல்லாசமாக இருக்க பலமுறை அழைத்தும் மறுத்து வந்துள்ளார். இது அனுமந்தனுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் தந்து வந்துள்ளது.. இதற்காகவே ராஜேஸ்வரியை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்..
சம்பவத்தன்று, மகனின் பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.. அப்போது அங்கு வந்த அனுமந்தன், கடைசியாக ஒருமுறை தனியாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்... ராஜேஸ்வரியும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
7 முறை டிராக்டர் லோடு மண்
அங்கு சென்றதுமே, ஏன் முன்புபோல தன்னிடம் பேசுவதில்லை என்று கேட்டு அனுமந்தன் தகராறு செய்துள்ளார்.. பிறகு உல்லாசத்துக்கும் அழைத்துள்ளார்.. இதனால் கோபமடைந்த ராஜேஸ்வரி, அனுமந்தனை திட்டி உள்ளார்.. இதைக்கேட்டு மேலும் ஆத்திரமடைந்த அனுமந்தன், கீழே கிடந்த கல்லை கொண்டு வந்து, தலையில் போட்டுள்ளார்..
பிறகு ராஜேஸ்வரியின் கை, கால்களிலும் கல்லாலேயே தாக்கி உள்ளார்.. இதில் ராஜேஸ்வரி அங்கேயே சுருண்டு மயங்கிவிட்டார்.. அவர் இறந்துவிட்டதாக நினைத்த அனுமந்தன், அருகில் இருந்த பள்ளத்தில் ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு, டிராக்டரில் வைத்திருந்த கட்டிட கழிவு மண்ணை கொட்டி உள்ளார்.
இப்படி 7 முறை டிராக்டரில் கட்டிட கழிவு லோடை ஏற்றி வைத்து குழிக்குள் கொட்டியிருக்கிறார்.. அதுவரை உயிருடன் இருந்த ராஜேஸ்வரி, மண்ணை கொட்டியதுமே உயிரிழந்துவிட்டார்.,
திடீர்னு நின்ற சத்தம்
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சத்தம் போட்டு தகராறு செய்வதை அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கவனித்துள்ளனர். அவ்வளவு நேரம் கேட்டு கொண்டிருந்த வாக்குவாதமும், சத்தமும் திடீரென நின்றுவிட்டதால் சந்தேகமடைந்து உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.. அப்போது பள்ளத்தில் அரைகுறையாக மண் அள்ளி கொட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பிறகுதான் போலீசார் மண்ணை தோண்டி ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். பிறகு பதுங்கியிருந்த அனுமந்தையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அப்போது அனுமந்தன் போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், ராஜேஸ்வரியும் நானும் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்து வந்தோம். இது அக்கம் பக்கம் தெரிந்துவிட்டதால் என்னிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்,.. உல்லாசத்திற்கும் மறுத்து வந்தார். அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்..
கடைசியாக பேச வேண்டும் என்று சொல்லி அழைத்தேன்.. அப்போது ராஜேஸ்வரி, உல்லாசத்திற்கு மறுத்ததுடன் இனிமேல் என்னிடம் பேசவேண்டாம் என்று திட்டவட்டமாக சொன்னதால் எனக்கு கோபம் வந்துவிட்டது.. இதில் அவரை பள்ளத்தில் தள்ளிவிட்டு கல்லை தூக்கிப் போட்டேன். மண்ணையும் நிரப்பினேன் என்றார்..
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications