மதுரையில் ஓடும் பேருந்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை!
மதுரையில் ஓடும் பேருந்தை வழிமறித்து இளைஞர் ஒருவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை : மதுரை அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் ஓடும் பேருந்தை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்தது. அதில் பயணித்துக் கொண்டிருந்த அமர் என்கிற இளைஞரை அரிவாளால் வெட்டியது.

இதில் படுகாயமடைந்த இளைஞர் அமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ஏழு பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. அமர் மதுரை அருகே உள்ள கரிமேட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications