சாதியை ஒழிக்க ராகுல் தலித் பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும்... மத்திய அமைச்சர் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : சாதியை ஒழிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலித் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிடுகிறார், அங்கேயே தங்குகிறார். சாதியை ஒழிக்க இது மட்டும் போதாது அவர் கலப்பு திருமணம் செய்ய வேண்டும்.

காந்தி வழியை பின்பற்றுவதாக சொல்லும் ராகுல் தனது திருமணத்திலும் அதனை செய்ய வேண்டும். அவரை திருமணம் செய்ய ஏராளமான பெண்கள் காத்திருந்தாலும், அவர் தலித் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுலுக்கு ஐடியா

ராகுலுக்கு ஐடியா

அவ்வாறு ராகுல்காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் சாதியை ஒழிக்க அவரே ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்றும் ராம்தாஸ் அத்வாலே கூறினார். ஏற்கனவே இதே கருத்தை மஹாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ராம்தாஸ் அத்வாலே ராகுல் தலித் பெண்ணை மணக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ராகுலின் திருமண சர்ச்சை

ராகுலின் திருமண சர்ச்சை

40 வயதாகும் ராகுல்காந்தியின் திருமணம் குறித்த பேச்சுகள் எப்போதுமே அனைவரின் மத்தியிலும் எழுந்த வண்ணம் இருக்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் சர்ச்சையான ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இப்போ என்ன சொல்வார் ராகுல்?

இப்போ என்ன சொல்வார் ராகுல்?

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி தனக்கு திருமணம் நடக்கும் என்ற விதி இருந்தால் திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தார். இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் கூறி இருக்கும் இந்த கருத்திற்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்ந்து சர்ச்சை கருத்துகள்

தொடர்ந்து சர்ச்சை கருத்துகள்

தலித் இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் ராம்தாஸ் அத்வாலே அண்மையில் தலித் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் நாட்டு சரக்கு குடிப்பதற்கு பதில் ரம் குடிக்கலாம் என்று கூறி சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியின் திருமணம் குறித்து பேசி அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union state minister Ramdoss Athwale urges RAhul gandhi to marry a dalit girl to disriminate caste from teh society not only having food at dalit house will not help to eradicate caste differentiation he adds.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற