தயிர் வேண்டாம்.. இந்தி வார்த்தை தஹியை பயன்படுத்துங்கள்! ஆவினுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் ஆர்டர்
சென்னை: தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் ஹிந்தி திணிப்பிற்கு எதிரான கோஷங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. முன்பு தமிழ்நாட்டில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த இந்த எதிர்ப்பு தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என்ற மற்ற ஹிந்தி அல்லாத மாநிலங்களிலும் கேட்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்தான் ஹிந்தி திணிப்பிற்கு எதிராகவும், இந்தி பிரச்சார சபைகளுக்கு எதிராகவும் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்களும், பேரணிகளும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

ஹிந்தி எதிர்ப்பு
ஹிந்தி திணிப்பிற்கு எதிராக நாடு முழுக்க தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு முறையும்.. ஏதோ ஒரு மூலையில் கொஞ்சமாக ஹிந்தி திணிப்பு நிகழ்ந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பது ஒரு தமிழராகவே இருப்பார். 1950களில் இருந்தே தமிழ்நாடுதான் ஹிந்தியை தனியாக எதிர்த்து கொண்டு இருக்கிறது. சமீபத்திய அரசியல் மாற்றங்கள் வங்கம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களையும் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க வைத்துள்ளது.

ஹிந்தி திணிப்பு
இணையத்தில் களமாடும் நெட்டிசன்கள் தொடங்கி சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் வரை ஒவ்வொருவரும் ஹிந்தி திணிப்பை ஒவ்வொரு வகையில் எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படித்தான் தற்போது மீண்டும் ஹிந்தி திணிப்பு விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்ப்பு
கன்னடத்தில் மோசரு மற்றும் தமிழின் தயிர் போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தஹி என்று வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேண்டும் என்றால் பிராக்கெட்டில் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தி வார்த்தை தஹியை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் இந்த விவகாரம் கடும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.

ஏன் இப்படி?
இரண்டு மாநிலங்களிலும் வட இந்தியர்கள் அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து நந்தினி சார்பாக இதற்கு விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆவின் சார்பாகவும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் இந்த உத்தரவு கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications