பேராசிரியர் மூர்த்தி இறப்பு அறிவுலகத்திற்கு இழப்பு.. ஆனைமுத்து #exclusive
போராசிரியர் து. மூர்த்தியின் மரணம் அறிவுலகத்திற்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்று மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் தலைவர் ஆனைமுத்து கூறியுள்ளார்.
சென்னை: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் து.மூர்த்தியின் இழப்பு இந்த சமூகத்திற்கும் அறிவுலகத்திற்கும் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு என்று மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் தலைவர் ஆனைமுத்து தெரிவித்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பேராசிரியர் து. மூர்த்தி டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தராததால் கடந்த ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்கழக வளாகத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து, தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியைத் தொடங்கிய பேராசிரியர் மூர்த்தி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராக விளங்கினார். அவர், பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய வழிகளைப் பயின்று சமூக பணிகளை ஆற்றியவர்.
பேராசிரியர் மூர்த்தியின் மறைவு குறித்து முதுபெரும் பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையத்துக்கு தெரிவித்த கருத்து:
மூர்த்தி ஒரு பன்மொழி புலவர். தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளை முறையாக கற்றவர். ஆங்கிலம், இந்தி மொழியை நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டவர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய வழியில் உழைக்கும் மக்களின் ஆட்சி இந்தியாவில் வர வேண்டும் என்று பாடுபட்டவர்.
சிந்தனையாளன், தினப்புரட்சி போன்ற பத்திரிகைகளில் ஏகாத்திபத்திய எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு குறித்த பல கட்டுரைகளை எழுதியவர்.
அவருடைய மறைவு இந்த சமூகத்திற்கும் அறிவுலகத்திற்கும் பெரிய இழப்பாகும். மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பாகும் என்று ஆனைமுத்து கூறியுள்ளார்.
பேராசிரியர் து.மூர்த்தியின் உடல் இன்று மாலை 3 மணி அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications