வாலு வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் உதவவில்லை- டி.ராஜேந்தர் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு பட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை படத்தின் தலைப்பைப் போல நீளமாக இழுத்துக் கொண்டே செல்கிறது பிரச்சினைகளும். நாளுக்குநாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை இப்போதைக்கு படமும் வெளியாவது மாதிரி தெரியவில்லை.

மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் வாலு படத்தின் மீது தொடுத்த வழக்கே இன்னும் உயர்நீதிமன்றத்தில் முடியவில்லை, இந்நிலையில் மேலும் 6 வழக்குகள் வாலு படத்தின் மீது போடப்பட்டு இருக்கின்றன.

Vaalu Movie Issue

வாலு படம் இந்தளவு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றது ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து யாரும் உதவி செய்யவில்லை, என்று வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் டி.ராஜேந்தர்.

இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் நிர்வாகி ஒருவரின் பதிலைக் கேளுங்கள் " சிம்புவை வைத்துப் படமெடுத்த எத்தனையோ தயாரிப்பாளர்கள், சிம்பு மீது புகார் கொடுத்து உள்ளனர். அப்பொழுதெல்லாம் சங்கத்தின் பேச்சைக் கேட்க சிம்புவோ, அவரது அப்பா டி.ராஜேந்தரோ முன்வரவில்லை.

அவருக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவருக்கு ஆதரவாக சங்கம் வரவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்" என்று கேட்டிருக்கிறார் அந்த சங்க நிர்வாகி.

ஒரு மனுஷன் எவ்வளவு அடியைத் தான் தாங்குறது...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+