வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து.. தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் கைது
வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து வழக்கு தொடர்பாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த மே 8 ஆம் தேதி தீ விபத்து நிகழ்ந்தில் 4 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ அங்கிருந்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கட்டடிடத்தின் உரிமையாளர் விஜயகுமாரை வடபழனி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். விஜயகுமார் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications