வைகை, பல்லவன் ரயில்கள் 2 நாட்கள் தாமதமாக இயங்கும்: தெற்கு ரயில்வே
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில்கள் இன்றும், நாளையும் தாமதமாக வந்து செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
செங்கல்பட்டு அருகே ஒட்டிவாக்கம் இருப்புப் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (வெள்ளி) நாளை (சனி) ஆகிய இரு நாட்கள் தென் மாவட்ட ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

2 மணிநேரம் தாமதம்
மதுரை-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12636) வழக்கமாக மதியம் 2.40 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். ஆனால் இன்றும், நாளையும் இந்த ரயில் ஒட்டிவாக்கம் அருகே 110 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்பதால் 2 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தடையும்.
செங்கல்பட்டில் நிறுத்தம்
இதே போல மதியம் 1.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12633) செங்கல்பட்டில் 45 நிமிடங்கள் நிறுத்தப்படும்.
பல்லவன் எக்ஸ்பிரஸ்
எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.
திருச்சி எக்ஸ்பிரஸ்
வழக்கமாக மாலை 6 மணிக்கு எழும்பூர் வந்தடையும் திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16854) ஒட்டிவாக்கம் அருகே 70 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்பதால் 80 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் வந்து சேரும்.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்
எழும்பூரில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16105) இரு நாட்களும் செங்கல்பட்டில் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications