திமுகவை ஒழிக்க வேண்டும் என்று விஜயகாந்த் பேசியுள்ளாரே?.. கருணாநிதிக்குத் தெரியாதா??.. வைகோ கேள்வி!
சென்னை: தேமுதிக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு டிவிக்குப் பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே. அதை பேப்பரில் படிக்கவில்லையா கருணாநிதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
தேமுதிக கூட்டணிக்காக மீண்டும் தவம் இருக்க ஆரம்பித்துள்ளது திமுக. ஆனால் தேமுதிக தரப்பில் இதுவரை எந்த அசைவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் தேமுதிக தொடர்பாக திமுகவை தொடர்ந்து தாக்கி வருகிறார் வைகோ.

முன்பு தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுகவை தில்லு முல்லு கட்சி என்று கடுமையாக சாடினார். இதற்கு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகரி உடனடியாக கண்டனம் தெரிவித்திருந்தார். பிரேமலதாவுக்கு திமுகவை விமர்சிக்க அருகதை கிடையாது என்று அவர் கூறியிருந்தார். ஆனால் திமுக தரப்பிலிருந்து இதுவரை யாரும் பிரேமலதா பேச்சைக் கண்டிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று 2வது பகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தனது கேப்டன் டிவியில் விஜயகாந்த் பேசுகையில் திமுக, அதிமுகவை மக்கள் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி தேமுதிக கூட்டணி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ மீண்டும் கருணாநிதிக்கு கேள்வி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றுதான் திமுகவையும், அதிமுகவையும் ஊழல் கட்சிகள். இரண்டு கட்சிகளையும் மக்கள் ஒழிகக் வேண்டும் என்று விஜயகாந்த் சாடியிருந்தார். இது நாளிதழ்களிலும் செய்தியாக வந்துள்ளது. தினசரி செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உள்ளவர் கருணாநிதி. இந்த செய்தியை அவர் படிக்கவில்லையா என்று கேட்டுள்ளார் வைகோ.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications