வைகோவும் திமுகவிற்கு வரலாம் அவரையும் கருணாநிதி மன்னிப்பார்: ஸ்டாலின அழைப்பு
சென்னை: கருணாநிதி, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், யாரையும் மன்னிக்க கூடியவர்.ம.தி.மு.க.,வில் இருப்பது இனி வைகோ ஒருவர்தான்; அவரையும் கருணாநிதி மன்னிப்பார்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ம.தி.மு.க.,விலிருந்து விலகி, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த, பாலவாக்கம் சோமுவின் மகன் திருமணம், ஈசிஆர் சாலையில் உள்ள, அக்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், தன் மனைவி துர்காவுடன் பங்கேற்ற ஸ்டாலின், நான் தொடர்ந்து, சுய மரியாதை திருமணங்களை நடத்தி வைக்கிறேன்.

சுய மரியாதை திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்' என, அங்கீகாரம் அளித்தவர் அண்ணாதுரை என்றார்.
ம.தி.மு.க.,வில் இருந்தபோதே, தி.மு.க.,வினரோடு தொடர்பில் இருந்தார் பாலவாக்கம் சோமு. சில காலம் விலகி இருந்த அவர், மீண்டும் தாய் கட்சியில் சேர்ந்துள்ளார். இப்போது, ம.தி.மு.க.,வில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். 'தற்போது வைகோ வந்தால், அவரை தி.மு.க.,வில் சேர்த்து கொள்வீர்களா?' என, நீங்கள் கேட்கலாம். கருணாநிதி, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், யாரையும் மன்னிக்க கூடியவர் என்று கூறினார்.
தொடர்ந்து அதிமுகவை அட்டாக் செய்த ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர்ஜெயலலிதா அரை மணி நேரம் பேசியுள்ளார். அதில், 25 நிமிடங்கள், என், 'நமக்கு நாமே பயணம்' பற்றியே விமர்சித்து உள்ளார். இதிலிருந்தே, 'நமக்கு நாமே பயணம்' மக்கள் மனதில் மட்டுமின்றி, முதல்வர் மனதிலும் பதிந்திருப்பதை அறியலாம். எனவே, கருணாநிதி தலைமையில், மீண்டும் தி.மு.க., ஆட்சி மலர, அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு வராத மதிமுகவை வழிக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட செயலாளர்களை திமுகவிற்கு இழுக்கும் ஆபரேசனை செய்ததே ஸ்டாலின்தான் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இப்போது வைகோவும் திமுகவிற்கு வரலாம் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications