ஈழத்து இளைஞரை இலங்கைக்கு அனுப்ப மோடி, ஜெ அரசு கூட்டுச்சதி: வைகோ
ஈழத்து இளைஞர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்புகின்ற முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், மத்திய -மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் இலங்கை கொலைகார அரசின் ஆதிக்கம்தான் இன்னும் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தயன்ராஜ் என்ற ஈழத் தமிழ் இளைஞர் மீது இலங்கையில் சில குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மைத்ரிபால சிறி சேனாவின் சிங்கள அரசு, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

இதன் பேரில் அவரை பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஜெயலலிதா அரசும் உடந்தையாகச் செயல்படுகிறது.
ஈழத் தமிழ் இளைஞர் தயன்ராஜ் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி, அவரை சித்ரவதை செய்து உயிரைப் பறிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது.
தன்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி, திருச்சி முகாமில் ஐந்தாவது நாளாக அவர் உண்ணாவிரத அறப்போர் நடத்துகிறார். அவரது மனைவியும், மகளும் மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
முன்னைய மத்திய அரசைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி அரசும் கொலைகார சிங்கள அரசுடன் கைகோர்த்துக்கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக வஞ்சகம் செய்கிறது.
இதற்கு ஜெயலலிதா அரசும் ஆதரவாகச் செயல்படுவதோடு, மத்திய அரசின் உளவுத்துறையும், தமிழக அரசின் உளவுத் துறையும் கூட்டுச் சதி செய்கின்றன. ஈழத்து இளைஞர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்புகின்ற முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், மத்திய -மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications