ஸ்டெர்லைட் சி.இ.ஓ நாவடக்கத்துடன் பேச வேண்டும்.. ஆலையே இருக்காது: வைகோ எச்சரிக்கை
ஸ்டெர்லைட் ஆலை சி.இ.ஓ. ராம்நாத்-த்துக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

கோவை: ஸ்டெர்லைட் ஆலை சி.இ.ஓ ராம்நாத் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மஹாராஷ்டிராவில் ஸ்டெர்லைட் ஆலை உடைத்தபோது ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் ஏன் மும்பை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை? வெளி நாட்டில் பணம் பெற்றுக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள், சமூக விரோதிகள், கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை நடத்துவோம் என பேசிய ஸ்டெர்லைட் சி.இ.ஓ. ராம்நாத் நாக்கை அடக்கி பேச வேண்டும் என்றார்.
தமிழக அரசின் ஆணை நிற்காது என பல்வேறு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள். ஆலையை ஓட்ட முடியாது. ஆலையே இருக்காது.
ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா அல்லது பணமா என்பது தெரியவில்லை. மத்திய அரசு திணித்த நீட் என்கிற மரண கயிறு தமிழக பிள்ளைகளின் கனவை சிதைத்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் வெளி நாடுகளில் புகழ்பெற்ற மருத்துவர்களாக உள்ளனர்.
91.9% 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமிழகம் நீட்டில் 34-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 65% தேர்ச்சி பெற்ற மற்ற மாநிலங்கள் நீட்டில் முன்னிலையில் பெற்றுள்ளனர். தமிழகத்தில் வளரும் பிள்ளைகளை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications