பார்வையற்றவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு அடக்குவதா?: வைகோ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக தகுதிபெற குறைந்தபட்சமாக 40 சதவிகித மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களும், பட்டதாரிகளும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் அணுகி இருக்க வேண்டிய தமிழக அரசு, கண்டுகொள்ளாமல் பார்வையற்றவர்கள்தானே என்று அலட்சியப்படுத்தி, காவல்துறையைக் கொண்டு கடுஞ்சொல்லால் காயப்படுத்தியும், தாக்கியும் குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தி, திக்குத் தெரியாத காட்டில் விடுவதென்று முடிவெடுத்து, போராடும் பார்வையற்றவர்களை முதலமைச்சரைச் சந்திக்க வாருங்கள் என்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னை புறநகர் பகுதிகளில் இறக்கிவிட்ட செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு அலட்சிப்படுத்தி அவமதித்ததால் இனி நிரந்தரத் தீர்வை தமிழக முதலமைச்சரால்தான் தர முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலமாக நிருபித்துக்கொண்டு வருகிறார்கள்.
பார்வையற்றவர்கள் ஒன்பது பேர், ஒன்பது அம்ச கோரிக்கையை வென்றெடுக்க மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் குன்றி, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராடிக்கொண்டு இருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகளை அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கனிவுடன் அவற்றைக் களைந்திட முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும். இவர்களில் அனுபவம் வாய்ந்த, அக்கறைகொண்ட திறமையான அதிகாரிகளை ஆலோசகர்ளாக நியமித்து, அவர்களைக் கொண்டே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து பணி நியமனம் செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றுச் சேர்கிறதா? என்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.
விழி இழந்தோரின் விடிவெள்ளி பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டிய தாரகை தன் வாழ்வில் அலை அலையாக வந்த இன்னல்களை இடுக்கண்களை எதிர்த்து நின்று போராடி வெற்றி கண்ட வீராங்கணை கெலன் கெல்லரின் தாரக மந்திரம், ‘என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடிலும், என்னாலும் சிலவற்றைச் செய்ய முடியும்' என்பதைப் போன்று உறுதி குலையாமல் போராடிக் கொண்டு வரும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் மாற்றுத் திறனாளிகள் என்பதையும் கருணைமிக்க அணுகுமுறைக்கு உரியவர்கள் என்பதையும் மனதில்கொண்டு தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு பிரச்சனையை அணுக வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications