மதுரை வெடிகுண்டு வீச்சு… பழிக்கு பழி வேண்டாம்: வைகோ கோரிக்கை
மதுரை: பழிக்கு பழி எண்ணம் இளைஞர்களிடம் கூடாது,'' என, மதுரையில் நடந்த வெடிகுண்டு வீச்சில் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறிய ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.
மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு வந்த போது சிந்தாமணி அருகே வெடிகுண்டு வீச்சுக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதான நபர்கள் ஒரு ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரும் போது பழிவாங்கும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்டதில் முத்துவிஜயன் என்பவர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பாட்டம் சென்று, இறந்த முத்துவிஜயன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முத்துவிஜயனின் தாயார் சங்காயி மற்றும் உறவினர்களிடம் பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருகை தந்த போது முத்துவிஜயன் போராட்டத்தில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். இலங்கை தமிழர்கள் மீது முத்துவிஜயன் தனிப்பட்ட ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் வைகோ தெரிவித்தார்.

நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் அந்த உணர்வோடுதான் தற்போது அஞ்சலி செலுத்த வந்ததாக கூறினார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அர்ஜூனன், முனீஸ்குமார் உட்பட நால்வரை வைகோ நேற்றிரவு சந்தித்தார். பின் அவர், ""பட்டப்பகலில் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் சகோதரத்துவமாக வாழ வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications