நாடாளுமன்றத்தில் கர்ஜித்த வைகோவிற்கு சட்டசபைக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் களமிறங்குகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அண்ணாநகரில் எம்.ஜி.ஆர் காலணியில், மாரியம்மன் கோவில் முன்பாக சனிக்கிழமையன்று பிரச்சாரம் தொடங்கிய வைகோ, வேட்பாளர் பட்டியலை அன்றே அறிவித்தார்.

மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்த வைகோ, கோவில்பட்டி பெயரை சொன்ன உடன் கூட்டம் அமைதியாக இருந்தது. கோவில்பட்டியில் பம்பரம் சின்னம் என்று கூறிய போதும் தொண்டர்கள் மத்தியில் எந்த சத்தமும் இல்லை. கோவில்பட்டியில் அடியேன் வைகோ போட்டியிடுகிறேன் என்று சொன்ன உடன் ஆர்ப்பரித்தது கூட்டம். உடனே பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்துக்களை கூறினர்.

மதிமுக தொடங்கப்பட்டபோது 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த வைகோ, சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறார்.

வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் அதிக முறை அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை

ராஜ்யசபா எம்.பி

ராஜ்யசபா எம்.பி

திமுகவில் இருந்த போது 1978ம் ஆண்டு முதன் முதலில் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் தொடர்ந்து 1990 வரை 18 ஆண்டுகள் ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார்.

சட்டசபைத் தேர்தலில் போட்டி

சட்டசபைத் தேர்தலில் போட்டி

1993ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய பின்னர் வைகோ முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது 1996 ஆம் ஆண்டுதான். அந்த தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோ வெறும் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதன்பின்னர் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

லோக்சபா தேர்தலில் போட்டி

லோக்சபா தேர்தலில் போட்டி

1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வைகோவிற்கு 3வது இடம் கிடைத்தது. இதையடுத்து 1998 மற்றும் 1999ல் நடந்த லோக்சபாத் தேர்தலில் அதே சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

விருதுநகரில் தோல்வி

விருதுநகரில் தோல்வி

விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்டப்பின்னர், கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வைகோ காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் தோல்வியைத் தழுவினார். 2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இந்தமுறையும் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

கோவில்பட்டியில் களமிறங்கும் வைகோ

கோவில்பட்டியில் களமிறங்கும் வைகோ

லோக்சபா தேர்தலில் இரண்டு தோல்விகளை சந்தித்த பின்னர் தற்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு திரும்பியுள்ளார் வைகோ. கோவில்பட்டியில் அவர் களம் காண்கிறார்.

கோவில்பட்டியில் ஏன் போட்டி

கோவில்பட்டியில் ஏன் போட்டி

வைகோ கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அருகே இருப்பதால் கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு வைகோ நன்கு அறிமுகமானவர். வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகள் இத்தொகுதியில் அதிகம். அவரது உறவினர்கள் அதிகம் பேர் இத்தொகுதியில் உள்ளனர்.

பலத்த போட்டி

பலத்த போட்டி

மதிமுகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இருப்பதும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. இதுவே வைகோ கோவில்பட்டியை தேர்வு செய்வதற்கு ஒரு காரணம். ஆனால், இந்த முறை பலமுனை போட்டி இருப்பதால் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி என்பது சவாலாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டசபையில் கர்ஜிப்பாரா வைகோ

சட்டசபையில் கர்ஜிப்பாரா வைகோ

வைகோவின் நாடாளுமன்ற பேச்சுக்கள் வெகு பிரச்சித்தம். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் என பல பிரதமர்கள் முன்னிலையில் கம்பீர உரை நிகழ்த்தியிருக்கிறார். இதுவரை சட்டசபைக்குள் நுழைந்திராத கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். இங்கு வெற்றி பெற்று, சட்டசபையிலும் தனது உரையை பதிவு செய்வாரா பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+