மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் வைகோ!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான தாயகத்தில் நாளை முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறவுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதலில் மதிமுக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றன. மக்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்தக் கூட்டணியின் தலைவர்களும் செயல்பட்டு வந்தனர்.
மாற்று அரசியல் என்று பேசி வந்த இந்தத் தலைவர்கள் திடீரென தேமுதிகவை இழுக்க முயற்சித்தது மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. கடைசியில் தேமுதிக, தமாகா என எங்குமே இடம் கிடைக்காத கட்சிகளை இவர்கள் இழுத்து வந்ததால் இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தது. அதை விட கொடுமையாக விஜயகாந்த்தின் செயல்கள் மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்து விட்டன. இதனால் கூட்டணி மொத்தமாக படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
இந்த நிலையில்தான் மதிமுக தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் சட்டசபைத் தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications